இராயக்கோட்டை
இராயக்கோட்டை (ஆங்கிலம்:Rayakottai) இது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். [3][4] இந்த ஊருக்கு சேலம் பெங்களூரு தடத்தில் இராயக்கோட்டை தொடர்வண்டி நிலையம் என்ற பெயரிலான தொடர்வண்டி நிலையம் உள்ளது.
இராயக்கோட்டை | |
அமைவிடம் | 12°30′49″N 78°01′56″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோட்டை
இவ்வூருக்கு பக்கத்தில் உள்ள மலையில் கோட்டை உள்ளது இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரமுடையது. இக்கோட்டையை தரைக்கோட்டை, மலைக்கோட்டை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மலைக்கோட்டை சிறந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டது. பலகுளங்கள், வெடிமருந்துச் சாலைகள், இடிபாடுகளுடன் கூடிய பல கட்டடங்கள் உள்ளன. முதல் மூன்று மைசூர் போர்களிலும் இராயக்கோட்டை சிறப்பிடம் பெற்றது. ஐதர், திப்புவிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையே பல போர்கள் நடைபெற்றுள்ளன. இக்கோட்டை திப்புவிடமிருந்து மேஜர் கௌடி என்பவரால் 20.7.1791 இல் ஆங்கிலேயர்வசமானது.கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளின் ஒன்றாகவும், தலைமைக் கோட்டையாகவும் இருந்த்து. இந்தியாவிற்கு போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் வந்த சமயத்தில் இந்த ஊரை மிக அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.[5]
தரைக்கோட்டை
மலைக்கோட்டையில் அரச பரம்பரையினர் வாழ்ந்தனர்.அவர்களின் பாதுகாப்புக்காக தரைக்கோட்டைக் கட்டப்பட்டது. இது ஜெகதேவிராயர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை இந்த கோட்டை பயன்பாட்டில் இருந்தது. இப்பகுதியில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளாக ஆண்டுவந்தவர்கள், ஒவ்வொரு காலத்திலும், ஒரு நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தினர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1792 ஆம் ஆண்டு, மேஜர் கௌடி தலைமையில், 800 வீரர்கள் கொண்ட படை, திப்புசுல்தானைத் தாக்க வந்தது. இரண்டு நாட்கள் நடந்த சண்டைக்குப் பிறகே, இக்கோட்டையின் வடக்குப்பகுதி மதிலை, பீரங்கி கொண்டு தகர்த்தனர். அந்த அளவுக்கு இத்தரைக்கோட்டை உறுதியாக இருந்துள்ளது. தொடர்ந்து ஆங்கிலேயப்படை அங்கு தங்கியது. அக்காலகட்டத்தில் இறந்த படையினரின் உடல்கள் அங்கேயேப் புதைக்கப் பட்டன. அதில் முக்கியமானவர் ஜான் இன்னிஷ் ஆவார். அவர் இறந்த தேதி20 மார்ச்சு 1802 என, இராயக்கோட்டைச் சாலையிலுள்ள பள்ளி அருகே இருக்கும் சமாதி கூறுகிறது.
படங்கள்
”இராயக்கோட்டையிலுள்ள கோட்டை”
ஹென்றி சோல்ட்”இராயக்கோட்டையிலுள்ள கோட்டை”
தோமஸ் டானியல்</cente”இராயக்கோட்டையிலுள்ள கோட்டை மதில் சுவர்”
”இராயக்கோட்டையிலுள்ள கோட்டைக் கிடங்கு கட்டடம்”
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=31¢code=0003&tlkname=Denkanikottai#MAP
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=31&blk_name=%27Kelamangalam%27&dcodenew=30&drdblknew=9
- தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.