தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல்

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தை வழிநடத்தும் அலுவலர் ஆவார். தமிழ்நாடு 1950 வரை சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது, 1950 முதல் 69 வரை சென்னை மாநிலம் என்று வழங்கப்பட்டது. இப்பட்டியலில் 1920 முதல் தற்காலம் வரை, சென்னை சட்டமன்றத்தின் (இரு அவைகள்) தலைவர்களின் பெயர், கட்சி, பதவி காலம் ஆகியவை தரப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் இந்தியாவில் அவைத்தலைவர்கள்

பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் ஒரு அங்கமாகிய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் 1920–37 இல் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. அம்முறையில் ஓரங்க (unicameral) சட்டமன்றம் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றழைக்கப்பட்டது. அதன் தலைவர்கள் பிரசிடன்ட் என்று அழைக்கப்பட்டனர். 1937 இல் மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப் பட்டது. அம்முறையில் சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன – கவுன்சில் என்றழைக்கப் பட்ட மேலவையின் தலைவர் சேர்மன் எனவும், அசம்பிளி என்றழைக்கப் பட்ட கீழவையின் தலைவர் ஸ்பீக்கர் எனவும் வழங்கப்பட்டனர்.[1][2][3][4][5]

இரட்டை ஆட்சிமுறையில் அவைத் தலைவர்கள்

(பிரசிடென்ட், மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்)

# பெயர் தொடக்கம் முடிவு கட்சி
1பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி1920பிப்ரவரி 1925கட்சி சார்பற்றவர்
2எல். டி. சாமிகண்ணு பிள்ளைபிப்ரவரி 1925செப்டம்பர் 1925நீதிக்கட்சி
3எம். ரத்தினசாமிசெப்டம்பர் 19251926நீதிக்கட்சி
4சி. வி. எஸ். நரசிம்ம ராஜூ19261930சுயாட்சி கட்சி
5பி ராமசந்திர ரெட்டி19301937நீதிக்கட்சி

மாநில சுயாட்சி முறையில் அவைத் தலைவர்கள்

மேலவை

1937 இல் சென்னை சட்டப்பேரவை

(சேர்மன், சென்னை மாகாண சட்டமன்ற மேலவை)

# பெயர் தொடக்கம் முடிவு கட்சி
1யு. ராமா ராவ்19371945காங்கிரசு
2ஆர். பி. ராமகிருஷ்ண ராஜூ19461952காங்கிரசு

கீழவை

(ஸ்பீக்கர், சென்னை மாகாண சட்டமன்ற கீழவை)

# பெயர் தொடக்கம் முடிவு கட்சி
1புலூசு சம்பாமூர்த்தி19371942இந்திய தேசிய காங்கிரசு (காங்கிரசு)
தேர்தல் நடைபெற வில்லை19421946
2ஜெ. சிவஷண்முகம் பிள்ளை19461952காங்கிரசு

இந்தியக் குடியரசில் அவைத் தலைவர்கள்

1950 ஜனவரி 26, ஆம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. புதிய அரசியல் சட்ட அமைப்பின் படி, மாநில சட்டமன்றங்கள் ஈரங்க (bicameral) அவைகளாக இருந்தன. மேலவை Legislative Council என்றும், கீழவை Legislative Assembly என்றும் வழங்கப் பட்டன. மேலவையின் தலைவர் சேர்மன் என்றும், கீழவையின் தலைவர் ஸ்பீக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். 1969 ஆம் ஆண்டு சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்ற அவைகளும், தமிழ் நாடு சட்டமன்ற கீழவை/மேலவை என்று வழங்கப்பட்டன. மேலவை 1986 இல் நீக்கப்பட்டது.[6][7][8][9][10][11][12][13]

மேலவை

பல பத்தாண்டுகளாக தமிழக சட்டப்பேரவை கூடிய புனித ஜார்ஜ் கோட்டை

(சேர்மன், சென்னை மாநிலம் / தமிழ் நாடு சட்டமன்ற மேலவை)

# பெயர் தொடக்கம் முடிவு கட்சி
1டாக்டர் பி. வி. செரியன்195220 ஏப்ரல் 1964காங்கிரசு
2எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்19641970காங்கிரசு
3காட்டுக்குளம் கார்த்திகேயன்19701976திமுக
4ம. பொ. சிவஞானம்19761986தமிழரசுக் கழகம்

கீழவை

(ஸ்பீக்கர், சென்னை மாநிலம் / தமிழ் நாடு சட்டமன்ற மேலவை)

# பெயர் தொடக்கம் முடிவு கட்சி துணைத் தலைவர்
1ஜெ சிவஷண்முகம் பிள்ளை06 மே 195216 ஆக்ஸ்ட் -1955காங்கிரசுபக்தவத்சலு நாயுடு
2என். கோபால மேனன்27 செப்டம்பர் 195501 நவம்பர் 1956காங்கிரசுபக்தவத்சலு நாயுடு
3யு. கிருஷ்ணா ராவ்30 ஏப்ரல் 195703 ஆகஸ்ட் 1961காங்கிரசுபக்தவத்சலு நாயுடு
4எஸ். செல்லபாண்டியன்31 மார்ச் 196214 மார்ச் 1967காங்கிரசுகே. பார்த்தசாரதி
5சி. பா. ஆதித்தன்17 மார்ச் 196712 ஆகஸ்ட் 1968திமுகபுலவர் கே. கோவிந்தன்
6புலவர் கே. கோவிந்தன்22 பிப்ரவரி 196914 மார்ச் 1971திமுகஜி. ஆர். எட்மன்டு
7கே. ஏ. மதியழகன்24 மார்ச் 197102 டிசம்பர் 1972திமுகபெ. சீனிவாசன்
8பெ. சீனிவாசன் (தற்காலிகத் தலைவர்)02 டிசம்பர் 197203 ஆகஸ்ட் 1973திமுக
9புலவர் கே. கோவிந்தன்03 ஆகஸ்ட் 197303 ஜூலை 1977திமுகஎன். கணபதி
10முனு ஆதி06 ஜூலை 197718 ஜூன் 1980அதிமுகசு. திருநாவுக்கரசர்
11க ராஜாராம்21 ஜூன் 198024 பிப்ரவரி 1985அதிமுகபால் ஹெக்டர் பாண்டியன்
12பி. ஹெச். பாண்டியன்27 பிப்ரவரி 198505 பிப்ரவரி 1989அதிமுகவி. பி. பாலசுப்ரமணியன்
13மு. தமிழ்க்குடிமகன்08 பிப்ரவரி 198930 ஜூன் 1991திமுகவி. பி. துரைசாமி
14சேடப்பட்டி முத்தையா03 ஜூலை 199121 மே 1996அதிமுககே. பொன்னுசாமி, கே. காந்திராஜன்
15பி. டி. ஆர். பழனிவேல்ராஜன்23 மே 199621 மே 2001திமுகபரிதி இளம் வழுதி
16கா. காளிமுத்து24 மே 200101 பிப்ரவரி 2006அதிமுகஎ. அருணாசலம்
17இரா. ஆவுடையப்பன்19 மே 200615 மே 2011திமுகவி. பி. துரைசாமி
18டி. ஜெயக்குமார்27 மே 201129 செப்டம்பர் 2012அதிமுகபி. தனபால்
19பி. தனபால்10 அக்டோபர் 2012அதிமுகபொள்ளாச்சி வி. ஜெயராமன்
20பி. தனபால்அதிமுக

மேற்கோள்கள்

  1. Johari, J. C. THE CONSTITUTION OF INDIA A Politico-Legal Study. Sterling Publishers Pvt. Ltd. பக். 226. ISBN 81-207-2654-5, ISBN 978-81-207-2654-3. http://books.google.com/books?id=JDWjAzP0mHEC&pg=PA226.
  2. Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916–37. Poompozhil Publishers. பக். 212–220. http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ.
  3. "Legislative Council to be revived: Karunanidhi". The Hindu (7 April 2010). பார்த்த நாள் 5 May 2010.
  4. Naidu, R. Janardhanam; K. Ramalingam, V. Subbiah. Bharani's Madras handbook. http://books.google.com/books?lr=&client=firefox-a&cd=4&as_brr=0&id=oG8dAAAAMAAJ&dq=cherian+rama+rao+madras+legislative+council&q=rama+rao#search_anchor.
  5. "List of Governors of Madras, Provinces of British India". Worldstatesman. பார்த்த நாள் 5 May 2010.
  6. World Statesmen.org — Indian states since 1947
  7. Government of Tamil Nadu — The State Legislature — Origin and Evolution
  8. "dated September 28, 1955: Madras Assembly Speaker". தி இந்து. September 28, 2005. http://www.hindu.com/2005/09/28/stories/2005092800270902.htm.
  9. "dated May 1, 1957 : New Speaker of Madras". The Hindu. May 1, 2007. http://www.hindu.com/2007/05/01/stories/2007050100021200.htm.
  10. "Statistical report on General Election 1962 to the Legislative Assembly of Madras". Election Commission of India.
  11. "Statistical report on General Election 1967 to the Legislative Assembly of Madras". Election Commission of India.
  12. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.
  13. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu.

மேலும் படிக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.