கோடல்

கோடல் அல்லது வெண்காந்தள் (Gloriosa modesta?) என்பது காந்தள் மலர். குறிஞ்சிப்பாட்டு மலர்களின் பெயரை அடுக்கிக் காட்டும்போது ஒண்செங்காந்தள் என்று செங்காந்தள் மலரையும், கோடல் என்று வெண்காந்தள் மலரையும் குறிப்பிடுகிறது.

கோடல்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: கலன்றாவரம்
வகுப்பு: Liliopsida
வரிசை: Liliales
குடும்பம்: Colchicaceae
பேரினம்: காந்தள்
இனம்: Gloriosa modesta
இருசொற் பெயரீடு
Gloriosa modesta
(Hook.) J.C.Manning & Vinn.
வேறு பெயர்கள்

Littonia modesta Hook.
Littonia keitii Leichtlin

காந்தள் மலருக்கு ஆறு இதழ்கள் மட்டுமே உண்டு. முருகப்பெருமானுக்கு ஆறு தலை எனக் கற்பனை செய்கின்றனர். காந்தள் மலருக்குக் கார்த்திகை மலர் என்னும் பெயர் உண்டு. முருகனைக் கார்த்திகேயன் என்பார்கள். இவை எல்லாமே ஒப்புமைக் கற்பனைகள்.

பெண்ணின் கையிலிருந்த வளையல்கள் கோடல் மலர் போலக் கழன்று வீழ்ந்தன எனப் பாடல்கள் உவமை காட்டுகின்றன.[1][2]

சங்கு அடுத்துச் செய்த வளையல்கள் வெள்ளைநிறம் கொண்டவை. எனவே வெண்காந்தள் மலராகிய கோடல் மலரே இங்கு உவமையாக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது.

மேலும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல், இலங்கு ஏர் எல்வளை அறை ஊரும்மே - கலித்தொகை 7-15,
  2. ஊழ் உற்ற கோடல் வீ இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு - கலித்தொகை 121-13
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.