சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்

சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் (ஆங்கிலம்:Salem Junction), தமிழகத்தின் சேலத்தில் உள்ள சந்திப்பு ரயில் நிலையம். சேலத்தில் உள்ள மற்ற ரயில் நிலையங்கள் சேலம் டவுன் மற்றும் சேலம் மார்க்கெட். இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான சேலம் மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தின் குறியீடு SA ஆகும்.

சேலம் சந்திப்பு
Salem Junction
இந்திய இரயில்வே நிலையம்
இடம்ஜங்சன் பிரதான சாலை, சேலம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு
 இந்தியா
அமைவு11°40′17.05″N 78°6′47.6″E
உயரம்288மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலம்.
தடங்கள்ஜோலார்பேட்டை - சோரனூர் தடம்
சேலம் - கரூர் தடம்
சேலம் - விருத்தாச்சலம்
சேலம் - பெங்களூர்
சேலம் - ஓமலூர் - மேட்டூர் அணை
நடைமேடை6
இருப்புப் பாதைகள்8
இணைப்புக்கள்பேருந்து, டாக்ஸி, ஆட்டோ ரிக்ஸா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுSA
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
ரயில்வே கோட்டம் சேலம்
மின்சாரமயம்உண்டு
 சேலம்–கரூர்–திண்டுக்கல் இரயில் வழித்தடம் 
Legend
km
to ஜோலார்பேட்டை சந்திப்பு
to பெங்களூர் நகர இரயில் நிலையம்
to மேட்டூர் அணை
0 சேலம் சந்திப்பு
to விருதாச்சலம் சந்திப்பு
to ஈரோடு சந்திப்பு
13 மல்லூர்
26 இராசிபுரம்
34 புதுசத்திரம்
40 கலங்கானி
52 நாமக்கல்
59 லத்துவாடி
70 மோகனூர்
74 வாங்கள்
to ஈரோடு சந்திப்பு
86 கரூர் ஜங்ஷன்
to திருச்சிராப்பள்ளி சந்திப்பு
91 தான்தோனி
101 வெள்ளியானை
115 பாளையம்
131 வேம்பூர்
139 எரியோடு
SA எல்லை
மதுரை limits
to திருச்சிராப்பள்ளி சந்திப்பு
160 திண்டுக்கல் சந்திப்பு
to மதுரை சந்திப்பு

சேலம் சந்திப்பானது சென்னை-கோவை, மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு. 2007 ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமை இடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள் இப்பொழுது சேலம் ரயில்வே கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வசதிகள்

இந்த தொடருந்து நிலையத்தில் கீழ்கண்ட வசதிகள் உள்ளன.

  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நடுவம்
  • புத்தக விற்பனை நிலையம்
  • ஐ.ஆர்.சி.டி.சி தேநீரகம்
  • ஆவின் பாலகம்
  • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
  • தொடருந்து இருப்பிடங்காட்டி/ ஓடும் நிலை அறியும் சேவை
  • ஒலிபெருக்கி அறிவிப்பு சேவை உண்டு

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.