திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி)
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 4. இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், பூனமலை, திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருத்தணி வட்டம்
அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம், ஆற்காடு, நெடம்பரம், பணப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி, முத்துகொண்டபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு, வியாசாபுரம், பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மபுரம், மணவூர், கபுலகண்டிகை, மருதவள்ளிபுரம், அரிச்சந்திரபுரம், ஜே.எஸ்.ராமபுரம், பெரிகளகத்தூர், ஒரத்தூர், லக்ஷ்மிவிலாஸபுரம், பாகசாலை, சின்னமண்டலி மற்றும் களம்பாக்கம் கிராமங்கள்.
- திருவள்ளூர் வட்டம்
அட்சன்புரம், பிளேஸ்பாலயம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாலயம், தோமூர், திருப்பேர், அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை, மூவூர், நெய்வேலி, இராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரநிசாம்பேட்டை, குன்னவலம், பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர், திருவள்ளூர், பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர், வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர், நயம்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அலரம், பானம்பாக்கம், ராமன் கோயில், மடத்துக்குப்பம், செஞ்சி, தென்காரணை, சிட்ரம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்கலம், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, கீழ்ச்சேரி, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரஞ்சேரி, கூவம், பிள்ளையார்க்குப்பம், கோவிந்தமேடு, உளுந்தை, தொடுகாடு, வயலூர், கோட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர், புதுப்பட்டு, சேலை மற்றும் திருப்பந்தியூர் கிராமங்கள்.
திருவள்ளூர் நகராட்சி மற்றும் வெங்கத்தூர் சென்சஸ் டவுன்[1]
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | எம். தர்மலிங்கம் | கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி | 32599 | 26.65 | வி. கோவிந்தசாமி நாயுடு | கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி | 228462 | 23.26 |
1957 | ஏகாம்பர முதலி | காங்கிரசு | 40214 | 33.72 | வி. எசு. அருணாச்சலம் | காங்கிரசு | 34689 | 29.09 |
1962 | வி. எசு. அருணாச்சலம் | காங்கிரசு | 21609 | 50.19 | எசு. எம். துரைராசு | திமுக | 17175 | 39.89 |
1967 | எசு. எம். துரைராசு | திமுக | 40687 | 66.06 | வி. எசு. அருணாச்சலம் | காங்கிரசு | 19030 | 30.90 |
1971 | எசு. எம். துரைராசு | திமுக | 36496 | 62.81 | வி. எசு. அருணாச்சலம் | நிறுவன காங்கிரசு | 17759 | 30.56 |
1977 | எசு. பட்டாபிராமன் | அதிமுக | 30670 | 45.38 | முனிரத்தினம் நாயுடு | ஜனதா கட்சி | 22368 | 33.09 |
1980 | எசு. பட்டாபிராமன் | அதிமுக | 30121 | 41.49 | ஆர். புருசோத்தமன் | காங்கிரசு | 24585 | 33.87 |
1984 | எசு. பட்டாபிராமன் | அதிமுக | 44461 | 51.73 | எசு. ஆர். முனிரத்தினம் | திமுக | 39908 | 46.43 |
1989 | எசு. ஆர். முனிரத்தினம் | திமுக | 45091 | 47.18 | எம். செல்வராசு | அதிமுக (ஜெ) | 22852 | 23.91 |
1991 | சக்குபாய் தேவராசு | அதிமுக | 54267 | 56.91 | சி. சுப்பரமணி | திமுக | 27847 | 29.20 |
1996 | சுப்பரமணி என்கிற சி. எசு. மணி | திமுக | 65432 | 60.78 | ஜி. கனகுராசு | அதிமுக | 32178 | 29.89 |
2001 | டி. சுதர்சனம் | தமாகா | 47899 | 42.90 | வி. ஜி. இராசேந்திரன் | புதிய நீதி கட்சி | 27948 | 25.03 |
2006 | இ. எ. பி. சிவாஜி | திமுக | 64378 | --- | பி. இரமணா | அதிமுக | 55454 | |
2011 | ரமணா பி.வி | அதிமுக | 91337 | --- | இ.ஏ.பி.சிவாஜி | திமுக | 67689 | --- |
2016 | வி. ஜி. ராஜேந்திரன் | திமுக | 80473 | --- | அ. பாசுகரன் | அதிமுக | 76335 | --- |
- 1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதாலால் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியை சேர்ந்த தர்மலிங்கம் & கோவிந்தசாமி நாயுடு இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
- 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1977ல் திமுகவின் பொன்னுவேலு 7943 (11.75%) வாக்குகள் பெற்றார்.
- 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) முனிரத்தினம் நாயுடு 12560 (17.30%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் சுதர்சனம் 17686 (18.51%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் சுயேச்சை சச்சிதானந்தம் 18145 (16.25%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பார்த்தசாரதி 8048 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
மேற்கோள்கள்
- "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 24 சூன் 2015.
வெளியிணைப்புகள்
((பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்))